Sunday, December 11, 2011

காந்தி : Gandhi !

அகிம்சைப் போராளி!

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாக 1869 அக்டோபர் 2-ல் பிறந்தார். மகாத்மா காந்தியாக 1948 ஜனவரி 30-ல் மறைந்தார். காந்தியின் பிறந்தநாள்உலகம் எங்கும் சர்வதேச அகிம்சை தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது!

காந்தி பிறந்த அக்டோபர் 2-ம் தேதி நாட்டின் மூன்றாவது மற்றும் இறுதி தேசிய விடுமுறை. குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகியவை மற்ற இரண்டு விடுமுறைகள்!

முதன்முதலில் 'தேசத் தந்தை' என்று காந்தியை அழைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். 'மகாத்மா' என்று அழைத்தவர் ரவீந்திரநாத் தாகூர்!

காந்தி தொடங்கிய 'இந்தியன் ஒப்பீனியன்' குஜராத்தி, இந்தி, தமிழ் மற்றும் ஆங்கிலம் என நான்கு மொழிகளில் வெளியானது!

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இவர் வைத்த பெயர்தான் 'ஹரிஜன்' என்பது. அதன் பொருள், 'கடவுளின் குழந்தைகள்'!

'உடற் பயிற்சியின் அரசன் நடைப் பயிற்சி' என்று சொன்ன காந்தி, லண்டனில் சட்டம் பயிலும்போது, ஒரு நாளைக்கு 10 மைல்கள் நடந்தே சென்று காசை மிச்சப்படுத்திப் படித்தார்!

காந்தி ஒரு துறவியைப்போன்றவர்தான். அனால், அவரிடம் நகைச்சுவை உணர்வுக்குப் பஞ்சமே இருந்தது இல்லை. 1931-ல் லண்டனுக்குச் சென்றபோது, பிரிட்டிஷ் அரசரை முதலும் கடைசியுமாகச் சந்தித்தார் காந்தி. ஆறாம் ஜார்ஜ் மன்னரைச் சந்தித்துவிட்டு, பக்கிங்ஹாம் அரண்மனையைவிட்டு அவர் வெளியில் வந்தபோது, அவரைப் பத்திரிகையாளர்கள் சூழ்ந்துகொண்டனர். அதில் ஒருவர், 'இவ்வளவு குறைவான ஆடையுடன் வந்திருக்கிறீர்களே குளிரவில்லையா' என்று கேட்டார். 'எங்கள் இருவருக்கும் தேவையான அளவு ஆடைகளையும் சேர்த்து, மன்னரே அணிந்திருந்தார்' என்று பதில் அளித்தார் காந்தி!

'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தின்போது, காந்தி சொன்ன வாக்கியம்தான்... 'செய் அல்லது செத்து மடி!'

'கொள்கை இல்லாத அரசியல், வேலை செய்யாமல் வரும் செல்வம், மனசாட்சியை ஏமாற்றி வரும் இன்பம், பண்பு இல்லாத அறிவு, நியாயம் இல்லாத வணிகம், மனிதம் மறந்த அறிவியல், தியாகம் இல்லாத வழிபாடு'. இவை காந்தி குறிப்பிட்ட ஏழு சமூகப் பாவச் செயல்கள்!

தபால் அட்டைகள்தான் உள்ளதிலேயே மிகவும் சிக்கனமான தகவல் தொடர்புச் சாதனம் என்று கருதியவர் காந்தி!

கடிதங்கள் மிக நேர்த்தியாக மடிக்கப்பட்ட பின்பே உறையில் இட வேண்டும் என்பதில் உறுதியுடன் இருப்பார். காரணம், கடிதம் மடிக்கப்பட்டு இருக்கும் முறையிலேயே உங்களைப்பற்றிய அபிப்ராயம் தோன்றிவிடும் என்பார்!

யாருக்குக் கடிதம் எழுதினாலும் 'தங்களின் கீழ்ப்படிந்த சேவகன்' என்று எழுதியே கடிதத்தை முடிப்பார்!

கிழிந்த துணிகளைத் தானே தைத்துக்கொள்வார். எவ்வளவுதான் வறுமையில் ஒருவர் இருந்தாலும், உடுத்துகின்ற உடைகள் மிகத் தூய்மையாக இருக்க வேண்டும் என்பார். அதை அவரும் கடைப்பிடித்தார்!

ஒவ்வொரு இரவும் நாட்குறிப்பு எழுதும் பழக்கம்கொண்டவராக இருந்தார். அதுதான் பின்னாளில் அவரின் சுயசரிதையாகவும் மலர்ந்தது!

'சட்ட மறுப்பு இயக்கப் போராட்டத்தைக் கைவிடுங்கள்' என்று வெள்ளையர்கள் சொன்னபோது, அதற்கு காந்தி, தன் 11 அம்சத் திட்டத்தை ஏற்றுக்கொண்டால், போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தார். அதில் 11-வதாக இருந்த திட்டம், 'சுய பாதுகாப்புக்குத் தேவையான வெடி பொருட்களையும் ஆயுதங்களையும் தயாரித்துக்கொள்வதற்கான உரிமம் வழங்குதல்.' அகிம்சையைப் போதித்தவருக்குள் எப்படி இந்த எண்ணம் உதித்தது என்பது இன்று வரை பலரின் கேள்வி!

எந்த நிலையிலும் ஆங்கிலேயரை உடல் அளவில் காயப்படுத்துவதை அவர் அனுமதிக்கவில்லை. "நாம் அவர்களை எதிர்த்துப் போராடவில்லை. அவர்கள் நம் மீது திணிக்கும் அதிகாரத்தைத்தான் எதிர்க்கிறோம்" என்று அதற்கு விளக்கமும் அளித்தார்!

தான் தவறு செய்தால், அதற்காக மௌன விரதம் ஏற்பதும்... பிறர் தவறு செய்தால், அந்தத் தவறு செய்தவர் அதை உணர தான் உண்ணாவிரதம் இருப்பதையும் வாடிக்கையாகக்கொண்டு இருந்தார். இந்தக் குணம், அவர் தாய் புத்லிபாயிடம் இருந்து வந்ததாகும்!

ஆரம்ப காலங்களில், ஆசிரமத்தில் நடக்கும் தினசரி பிரார்த்தனைக் கூட்டங்களில், 'கடவுள் உண்மையானவர்' என்று சொல்லிவந்தார். விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, 'உண்மையே கடவுள்' என்று மாற்றிக்கொண்டார்!

இந்தியாவுக்கு வெளியே முதன்முதலில் காந்தியின் தபால் தலையை வெளியிட்ட நாடு எது தெரியுமா? அவர் தன் வாழ்நாளில் மிதிக்காத நாடான அமெரிக்காதான் அது. இது நடந்தது 1961 ஜனவரி 26-ல்!

ராட்டைச் சக்கரத்துக்கு முன் காந்தி அமர்ந்து இருப்பதுபோல இருக்கும் புகழ்பெற்ற புகைப்படம், மார்கேட் பூர்க் ஒயிட் என்பவரால் பிரபல லைஃப் இதழுக்காக எடுக்கப்பட்டது!

'என்னிடம் சீடனாக வந்து சேர்ந்த குரு' என்று காந்தி அழைத்தது வினோபா பாவேவைத்தான்!

மார்டின் லூதர்கிங், தலாய் லாமா, ஆங் சான் சூகி, நெல்சன் மண்டேலா, அடால்ஃபோ பெரேஸ் எஸ்க்யூவெல் ஆகிய ஐந்து உலகத் தலைவர்கள் நோபல் பரிசு பெற்றதற்கு முக்கியக் காரணம், காந்திய வழியைப் பின்பற்றியதுதான் என்று ஒப்புதல் அளித்திருக்கிறார்கள். ஆனால், காந்திக்கு நோபல் பரிசு தரவில்லை!

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, அதைக் கொண்டாட மறுத்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் காந்தி. இன்னொருவர் தந்தை பெரியார்!

போர்பந்தரில் பிறந்த காந்தி ஆரம்பித்த சபர்மதி ஆஸ்ரமத்தின் நினைவாகத்தான் 'சபர்மதி எக்ஸ்பிரஸ்' ரயில் விடப்பட்டது. ஆனால், 2002-ம் ஆண்டு கோத்ரா சம்பவத்தில் இந்த ரயில் எரிக்கப்பட்டு, குஜராத் கலவரத்துக்கு வித்திடப்பட்டது. காலத்தின் முரண்களில் இதுவும் ஒன்று!

'கனவில் இருந்து நிஜத்துக்கு, இருளில் இருந்து வெளிச்சத்துக்கு, மரணத்தில் இருந்து அமரத்துவத்துக்கு!' -காந்தி நினைவு மண்டபத்தில் எழுதிவைக்கப்பட்டு இருக்கும் வாசகம் இது!

Friday, June 17, 2011

Fun QA

சட்டசபையில் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று தி.மு.க. சொல்கிறதே?

பழைய முழக்கங்கள் ஞாபகத்துக்கு வருகின்றன!

அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு.

ஜனநாயகம் காக்கும் போரில் மிசா கால் தூசுக்கு சமம்.

மிசாவைக் காட்டி மிரட்டி னால், தமிழ்நாட்டுக்குள் நுழைய விசா வாங்க வேண்டி வரும்.

வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்.

துணிந்தவனுக்குத் தூக்கு மேடை பஞ்சு மெத்தை.

மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை... என்றெல்லாம் வளர்ந்த கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், 'தி.மு.க. உறுப்பினர்களுக்கு சபையில் பாதுகாப்பு இல்லை. ஒரே பகுதியில் இடம் ஒதுக்கினால்தான், சபைக்கு வருவோம்’ என்கிறார்.

ஸாரி, 'தளபதி’ என்ற அடை மொழி மிஸ் ஆகிவிட்டது!

கோட்சே இன்று இருந்திருந்தால், யாரைச் சுட்டிருப்பார்?

கோட்சேவை ஏதோ கூலிப் படைத் தலைவனைப்போலச் சொல்கிறீர்களே!

கொலை செய்வது கோட்சேவின் தொழில் அல்ல. தன்னுடைய நோக்கங்களுக்கு விரோத மாகக் காந்தி செயல்படுவதாக நினைத்தார் கோட்சே. நீதிமன்றத்தில் தன்னுடைய செய்கையை நியாயப்படுத்தியே பேசினார். இந்து தர்மத்தைக் காப்பாற்றுவதற்காகவே, இந்தக் காரியத்தைச் செய்ததாகச் சொன் னார்.

அதைவிட முக்கியமானது, தனக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து அவர் அப்பீல் செய்யவில்லை. நாம் அவரது சித்தாந்தத்தை ஏற்காவிட்டாலும், மகாத்மாவைச் சுட்டவர்கூட அழுத்தமான வரே!

Thursday, June 16, 2011

மணக்குதே... ருசிக்குதே...

30 வகை குழம்பு
தக்காளி குழம்பு

தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைக்கவும் அல்லது பொடியாக நறுக்கவும்), கீறிய பச்சை மிளகாய் - 1, பூண்டு - 2 பல், பொடியாக நறுக்கிய தேங்காய் - சிறிதளவு, சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தனியாத்தூள் - 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.





செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, தேங்காயைப் போட்டு... பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். தீயைக் குறைத்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் போட்டு வதக்கி, நறுக்கிய தக்காளிகளைப் போட்டு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பச்சை வாசனை போனதும், சீரகத்தூள், அரைத்த தக்காளி விழுது (அ) பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விட்டு, எண்ணெய் பிரிந்து வந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கவும்.

சுக்கு குழம்பு

தேவையானவை: சுக்கு - ஒரு சிறிய துண்டு, மிளகு - 2 டீஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கப், நறுக்கிய தக்காளி - கால் கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: சுக்கு, மிளகு, வெந்தயத்தை எண்ணெய் விடாமல் தனித்தனியே வறுத்து, ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதில் நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கி, புளிக் கரைசல் விட்டு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்க்கவும். எண்ணெய் பிரிந்து வரும்போது பொடித்த சுக்கு கலவையைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

வேர்க்கடலை குழம்பு

தேவையானவை: வேர்க்கடலை - அரை கப் (ஊற வைத்து, வேக வைக்கவும்), தேங்காய் துண்டுகள் - 2 (அரைக்கவும்), கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், புளிக் கரைசல், பொடியாக நறுக்கிய வெங்காயம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: ஒரு பாத்திரத்தில் புளிக் கரைசலை விட்டு... அரைத்த தேங்காய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு, தேவையான தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். வேக வைத்த வேர்க்கடலையைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் தீயைக் குறைத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகத்தூள், கறிவேப்பிலை போட்டு, பொரிந்ததும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக வந்ததும் கொதிக்கும் குழம்பில் கொட்டி இறக்கவும்.

பிடிகருணை குழம்பு

தேவையானவை: பிடிகருணை - கால் கிலோ (வேக வைத்து, தோலுரித்து, வட்டமாக நறுக்கவும்), சின்ன வெங்காயம் - 10 (ஒன்றிரண்டாக தட்டிக் கொள்ளவும்), கீறிய பச்சை மிளகாய் - 2, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - இரண்டரை டீஸ்பூன், தேங்காய்ப்பால் - ஒரு கப், புளி - எலுமிச்சை அளவு (கரைத்துக் கொள்ளவும்), வறுத்து பொடித்த சீரகம் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு



செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் புளிக் கரைசல், வெங்காயம், சீரகம், கீறிய பச்சை மிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு, எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து மூடி, கொதிக்க வைக்கவும். நன்றாகக் கொதித்ததும் தேங்காய்ப்பால், வேக வைத்த கிழங்கை சேர்த்து மிதமான தீயில் தளதளவென கொதிக்க வைத்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

அரைக்கீரை குழம்பு

தேவையானவை: அரைக்கீரை - ஒரு சிறிய கட்டு (ஆய்ந்து, கழுவி நறுக்கிக் கொள்ளவும்), பச்சை மிளகாய் - 3, பூண்டு - 5 பல், நாட்டுத் தக்காளி - 4, சின்ன வெங்காயம் - 5, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: பச்சை மிளகாய், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். வெங்காயத்தை தோல் உரித்துக் கொள்ளவும். குக்கரில் கீரை, பச்சை மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளியைப் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து, மூன்று விசில் வந்ததும் இறக்கி, உப்பு சேர்த்து மத்தினால் நன்றாகக் கடையவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் போட்டு, பொரிந்ததும் கீரைக் கலவையில் சேர்த்துக் கடையவும்.

மோர்க் குழம்பு

தேவையானவை: தேங்காய் துண்டுகள் - 2, பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 3, பூண்டு - ஒரு பல், இஞ்சி - சிறிய துண்டு, சீரகம் - 2 டீஸ்பூன் (இவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும்), மோர் - ஒரு கப், மஞ்சள்தூள், வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயம், வெண்டைக்காய் (அ) கத்திரிக்காய் வத்தல் (எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும்), வெள்ளரிக்காய், கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் மோரை விட்டு, அரைத்த தேங்காய் கலவை, மஞ்சள்தூள், உப்பு போட்டு அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறவும். கலர் மாறியதும், சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, வறுத்த வத்தல், வெள்ளரிக்காயைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்து குழம்பில் கொட்டி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

வெண்டைக்காய் குழம்பு

தேவையானவை: வெண்டைக்காய் - கால் கிலோ, வெங்காயம் - 1, கீறிய பச்சை மிளகாய், தக்காளி - தலா 2, பூண்டு - 2 பல், புளி - நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்தூள் - 2 டீஸ்பூன், தேங்காய் துண்டுகள் - 2, சீரகம் - ஒன்றரை டீஸ்பூன், கறிவேப்பிலை, குழம்பு பொடி - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: வெங்காயம், வெண்டைக்காய், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். தேங்காய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, வெண்டைக்காய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு நன்றாக வதக்கவும். தக்காளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மீண்டும் வதக்கி... மிளகாய்த்தூள், தேங்காய் - சீரகம் விழுதைப் போட்டு வதக்கவும். கடைசியாக புளியைக் கரைத்து ஊற்றி, சிறிது தண்ணீர் விட்டு, குழம்பு பொடி சேர்த்து, நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.

கத்திரி | முருங்கை குழம்பு

தேவையானவை: கத்திரிக்காய் - 100 கிராம், சிறிய முருங்கைக்காய், வெங்காயம், தக்காளி - தலா 1, பூண்டு - 2 பல், மிளகு - அரை டீஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், தனியாத்தூள், வறுத்து பொடித்த சீரகம், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, புளி - நெல்லிக்காய் அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: கத்திரிக்காய், முருங்கைக்காய், தக்காளி, வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து, காய்ந்ததும் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, துவரம்பருப்பு போட்டு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதில் முருங்கைக்காய் சேர்த்து வதக்கி, கத்திரிக்காய், தக்காளி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாத்தூள் போட்டு சிறிது நேரம் வதக்கவும். புளியைக் கரைத்து ஊற்றி, காய் வேகும் அளவுக்கு தண்ணீர் விட்டு மூடி வைக்கவும். தீயைக் குறைத்து, சீரகத்தூளை சேர்த்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

கடலைப்பருப்பு குழம்பு

தேவையானவை: கடலைப்பருப்பு - 100 கிராம், வாழைக்காய், தக்காளி, வெங்காயம் - தலா 1, பச்சை மிளகாய் - 2, பூண்டு - 3 பல், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் துண்டுகள் - 2, சீரகம், தனியா - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, குழம்பு பொடி - ஒன்றரை டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், பெருங்காயம், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: தேங்காய், சீரகம், தனியா, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து ஒன்றிரண்டாக பொடிக்கவும். காய்கறிகளை பொடியாக நறுக்கவும். குக்கரில் கடலைப்பருப்பு, பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள்தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, ஒரு கொதி வந்ததும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு மூடி வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் ஒன்றிரண்டாக அரைத்த பொடி, குழம்பு பொடி, உப்பு, பெருங்காயம் போட்டு நறுக்கிய வாழைக்காயைப் போட்டு வதக்கி, வேக வைத்த பருப்பில் கொட்டி, சிறிது தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.

சிறு பருப்பு குழம்பு

தேவையானவை: பயத்தம்பருப்பு - ஒரு சிறிய கப், தக்காளி, சௌசௌ, வெங்காயம் - தலா 1, பூண்டு - 2, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், தனியாத்தூள், குழம்பு பொடி - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கறிவேப்பிலை, பெருங்காயம் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: சௌசௌ, தக்காளி, வெங்காயம் மூன்றையும் நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் பயத்தம்பருப்பு, தக்காளி, பூண்டு, மஞ்சள்தூள் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், தனியாத்தூள், வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம், குழம்பு பொடி சேர்த்து... நறுக்கிய சௌசௌ, தேங்காய் துருவல், உப்பு போட்டு நன்றாக வதக்கவும். இதை, வெந்த பருப்புடன் சேர்த்துக் கொதிக்க விடவும். சௌசௌ நன்றாக வெந்ததும் இறக்கவும்.

மீல் மேக்கர் குழம்பு

தேவையானவை: சோயா உருண்டைகள் - முக்கால் கப், வெங்காயம் - 1, தக்காளி - 3, இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன், வறுத்துப் பொடித்த சீரகம் - 2 டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். சோயாவைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 நிமிடம் வைத்திருந்து, நன்றாகப் பிழிந்து கொள்ளவும். கொதிக்கும் நீரில் தக்காளியைப் போட்டு 2 நிமிடம் வைத்திருந்து எடுத்து, தோலுரித்து ஒன்றிரண்டாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு போட்டு தாளித்து, வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து வதக்கி... மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, அரைத்த தக்காளி சேர்த்து எண்ணெய் பிரிந்து வந்ததும், சோயா உருண்டைகளை சேர்த்து வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் (தேங்காய்ப்பாலும் சேர்க்கலாம்) விட்டு, வறுத்துப் பொடித்த சீரகத்தைப் போட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

மணத்தக்காளி குழம்பு

தேவையானவை: பச்சை மணத்தக்காளிக்காய், நறுக்கிய சின்ன வெங்காயம், தேங்காய்ப்பால் - தலா ஒரு கப், பூண்டு - 4 பல், தக்காளி - 1, புளி - எலுமிச்சை அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், குழம்பு பொடி - 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு,



செய்முறை: மணத்தக்காளியைக் கழுவி காம்பு நீக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பூண்டு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி... கறிவேப்பிலை, நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்தூள், குழம்பு பொடி, உப்பு போட்டுக் கிளறவும். மணத்தக்காளிக்காயைச் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கி, புளியைக் கரைத்து விட்டு, காய் வேகும் வரை கொதிக்க விடவும். இதில் தேங்காய்ப்பால் சேர்த்து, மிதமான தீயில் சிறிது நேரம் வைத்திருந்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

பாகற்காய் குழம்பு

தேவையானவை: மிதி பாகற்காய், சின்ன வெங்காயம் - தலா அரை கப், பூண்டு - 4 பல், தக்காளி - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய்ப்பால் - ஒரு கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், குழம்பு பொடி - 2 டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள், உப்பு - தேவையான அளவு,



செய்முறை: மிதி பாகற்காயை காம்பு நீக்கி கழுவி, இரண்டாக நறுக்கி, சிறிது உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், குழம்பு பொடி, வேக வைத்த பாகற்காய் போட்டு மறுபடியும் வதக்கி, புளியைக் கரைத்து ஊற்றி, நன்றாகக் கொதித்ததும் தேங்காய்ப்பால் சேர்த்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

பச்சை மொச்சைப் பயறு குழம்பு

தேவையானவை: பச்சை மொச்சைப் பயறு - கால் கிலோ, வெங்காயம், தக்காளி - தலா 1, புளி - நெல்லிக்காய் அளவு, பூண்டு - 2 பல், தேங்காய் துண்டுகள் - 2, சீரகம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்தூள் - 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். தேங்காய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும். பூண்டு, தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பச்சை மொச்சைப் பயறு போட்டு வதக்கவும். புளியை கரைத்து விட்டு... தேங்காய்-சீரகம் விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, கறிவேப்பிலை எல்லாவற்றையும் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, குக்கரை மூடி, 4 விசில் வந்ததும் இறக்கவும்.

வத்தல் குழம்பு

தேவையானவை: ஏதேனும் ஒரு வத்தல் - ஒரு கப் (சிறிது எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும்), கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, புளி - எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், குழம்பு பொடி - 2 டீஸ்பூன், நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கப், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு,



செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து... வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், குழம்பு பொடி, வறுத்த வத்தல், உப்பு சேர்த்து, புளியைக் கெட்டியாக கரைத்து ஊற்றி, நன்றாகக் கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

உருளைக்கிழங்கு மசாலா குழம்பு

தேவையானவை: உருளைக்கிழங்கு - கால் கிலோ, பூண்டு - 2 பல், வெங்காயம், தக்காளி, கீறிய பச்சை மிளகாய் - தலா 1, புளி - நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு, குழம்பு பொடி - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு,



செய்முறை: உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கடலைப்பருப்பு போட்டு தாளித்து... நறுக்கிய வெங்காயம், பூண்டு, கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி, உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், குழம்பு பொடி சேர்த்து வதக்கி, புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு போட்டு, நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.

வெந்தயக்கீரை குழம்பு

தேவையானவை: சின்ன வெங்காயம் - கால் கப், வெந்தயக்கீரை - ஒரு கட்டு (சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும்), பூண்டு - 4 பல், தக்காளி - 2, புளி - நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், குழம்பு பொடி - ஒன்றரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: வெங்காயம், பூண்டு, தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் போட்டு தாளித்து... வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். இதில், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், குழம்பு பொடி, உப்பு, கீரை சேர்த்து வதக்கி, புளியைக் கரைத்து ஊற்றி, மூடி போட்டு சிறிது நேரம் வைத்திருந்து, பிறகு மூடியைத் திறந்து, மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

கொண்டைக்கடலை புளிக்குழம்பு

தேவையானவை: கறுப்பு கொண்டைக்கடலை - ஒரு கப், தக்காளி, வெங்காயம் - தலா 1, பூண்டு - 2, இஞ்சி - அரை துண்டு, கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் துண்டுகள் - 2, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், தனியாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். தேங்காய், சீரகத்தை விழுதாக அரைக்கவும். கறுப்பு கொண்டக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் குக்கரில் வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... பூண்டு, இஞ்சி, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதனுடன் தேங்காய்-சீரக விழுதை சேர்த்து... மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாதூள், உப்பு, வெந்த கொண்டைக்கடலையைப் போட்டு, புளியைக் கரைத்து ஊற்றி, நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.

மிக்ஸ்டு மிளகாய் குழம்பு

தேவையானவை: பச்சை மிளகாய் - 10, குடமிளகாய் - 2, சின்ன வெங்காயம் - ஒரு கப், தக்காளி - 1, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, வெந்தயம், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: பச்சை மிளகாய், குடமிளகாய், தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், சீரகம் போட்டு தாளித்து... வெங்காயம், பச்சை மிளகாய், குடமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். இதனுடன் தக்காளி, உப்பு சேர்த்து வதக்கி, புளியைக் கரைத்து ஊற்றி, கொதிக்கவிடவும். மிளகாய் நன்றாக வெந்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

பக்கோடா குழம்பு

தேவையானவை: பக்கோடா - ஒரு கப், வெங்காயம், தக்காளி - தலா 1, புளி - நெல்லிக்காய் அளவு, மிளகாய்த்தூள் - காரத்துக்கேற்ப, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, சோம்பு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு,



செய்முறை: வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், சோம்பு போட்டு தாளித்து... நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் புளியைக் கரைத்து ஊற்றி... மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு, தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். குழம்பு கெட்டியாக இருக்கக் கூடாது. பச்சை வாசனை போனதும் பக்கோடாவை குழம்பில் போட்டு, சிறிது நேரம் கொதிக்க வைத்து, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

சுரைக்காய் குழம்பு

தேவையானவை: சிறிய சுரைக்காய், கீறிய பச்சை மிளகாய், வெங்காயம் - தலா 1, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள் - தலா 2 டீஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, தேங்காய் துண்டுகள் - 2, சீரகம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தனியாத்தூள் - ஒன்றரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: தேங்காய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். காய்களைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். இதில், கீறிய பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். புளியைக் கரைத்து ஊற்றி... மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், அரைத்த தேங்காய்-சீரக விழுதைச் சேர்த்து வதக்கி... சுரைக்காய், உப்பு, தேவையான தண்ணீர் விட்டு, கொதித்து நன்றாக வெந்ததும் இறக்கவும்.

பூண்டு குழம்பு

தேவையானவை: தோல் உரித்த பூண்டு - ஒரு கப், புளி - எலுமிச்சை அளவு, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பூண்டை போட்டு வதக்கவும். இதில் மிளகுத்தூள், சீரகத்தூள் போட்டு... உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, பூண்டு வேகும் அளவு தண்ணீர் விடவும். பிறகு புளியைக் கரைத்து ஊற்றி, நன்றாகக் கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

சுண்டைக்காய் குழம்பு

தேவையானவை: பச்சை சுண்டைக்காய், சின்ன வெங்காயம் - தலா ஒரு கப், தேங்காய் துண்டுகள் - 2, பூண்டு - 2 பல், கீறிய பச்சை மிளகாய் - 1, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், குழம்பு பொடி - 2 டீஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: பூண்டு, வெங்காயம், தேங்காயை பொடியாக நறுக்கவும். சுண்டைக்காயை காம்பு நீக்கி, கழுவி, மத்தால் லேசாக நசுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து... வெங்காயம், பூண்டு, கீறிய பச்சை மிளகாய், தேங்காய் சேர்த்து வதக்கி, சுண்டைக்காயைப் போட்டு நன்றாக வதக்கவும். இதில் மஞ்சள்தூள், உப்பு, குழம்பு பொடி போட்டு, புளியைக் கரைத்து ஊற்றி (காரம் தேவைப்பட்டால் மிளகாய்த்தூள் சேர்க்கலாம்), சுண்டைக்காய் வேகும் வரை கொதிக்க வைத்து, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

பருப்புக்கீரை குழம்பு

தேவையானவை: பருப்புக்கீரை - ஒரு கட்டு (கழுவி, பொடியாக நறுக்கவும்), துவரம்பருப்பு - முக்கால் கப், பூண்டு - 2 பல், வெங்காயம், தக்காளி - 1, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, தனியாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, பச்சை மிளகாய் - 2, சின்ன வெங்காயம் - 5, புளி - நெல்லிக்காய் அளவு, குழம்பு பொடி - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, துவரம்பருப்பு, கீரை, தக்காளி, உரித்த பூண்டு பல், கீறிய பச்சை மிளகாய், பாதி அளவு சின்ன வெங்காயம், மஞ்சள்தூள் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, வேக வைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... மீதமுள்ள வெங்காயம், காய்ந்த மிளகாய், சீரகம், தனியாத்தூள், கறிவேப்பிலை, குழம்பு பொடி, உப்பு போட்டு வதக்கி, புளியைக் கரைத்து விடவும். கடைசியில் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து வதக்கி, வேக வைத்த பருப்புக் கலவையில் கொட்டிக் கடைந்து, சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும்.

காலிஃப்ளவர்-பட்டாணி குழம்பு

தேவையானவை: காலிஃப்ளவர் (தனித்தனியாக உதிர்த்து வெந்நீரில் போட்டு எடுக்கவும்), பச்சைப் பட்டாணி - ஒரு கப், தக்காளி, வெங்காயம் - தலா 1, பச்சை மிளகாய், தேங்காய் துண்டுகள் - தலா 2, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், தனியாத்தூள், இஞ்சி-பூண்டு விழுது - தலா 2 டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்ந்தது - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள், எண்ணெய், உப்பு, - தேவையான அளவு.



செய்முறை: தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். தேங்காய், சீரகத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு வதக்கி... வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு, காலிஃப்ளவர், பச்சைப் பட்டாணி போட்டு, மிதமான தீயில் நன்றாக வதக்கவும். கடைசியில் தேங்காய் - சீரக விழுதைச் சேர்த்துக் கிளறி, தேவையான அளவு தண்ணீர் விட்டு, கொதிக்க வைத்து காய்கறி நன்றாக வெந்ததும் இறக்கவும்.

வாழைப்பூ குழம்பு

தேவையானவை: வாழைப்பூ - 1 (ஆய்ந்து, நடுவில் உள்ள நரம்பை நீக்கவும்), ஒன்றிரண்டாக தட்டிய சின்ன வெங்காயம், தேங்காய்ப்பால் - தலா ஒரு கப், சீரகம் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: ஆய்ந்த வாழைப்பூவை சுத்தம் செய்து வேக வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து விட்டு, வெங்காயம், சீரகத்தைப் போட்டு... உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும் வெந்த வாழைப்பூ, தேங்காய்பால் சேர்த்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

காளான் குழம்பு

தேவையானவை: நறுக்கிய காளான் - ஒரு கப், சின்ன வெங்காயம் - 10, தேங்காய் துண்டுகள் - 2, சீரகம் - ஒரு டீஸ்பூன், மிளகு - 3 டீஸ்பூன், தனியாத்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: தேங்காய், மிளகு, சீரகத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு... நறுக்கிய காளான், சின்ன வெங்காயம், அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தண்ணீர் தெளித்து, அடுப்பில் வைத்து தட்டால் மூடவும். லேசாக வெந்ததும் மூடியைத் திறந்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, காளான் வேகும்வரை கொதிக்க வைத்து இறக்கவும்.

குண்டு மொச்சை குழம்பு

தேவையானவை: குண்டு மொச்சை - முக்கால் கப், கத்திரிக்காய் - 2, முருங்கைக்காய், கீறிய பச்சை மிளகாய், தக்காளி, பெரிய வெங்காயம் - தலா 1, புளி - எலுமிச்சை அளவு, பூண்டு - 2 பல், தேங்காய் துண்டுகள் - 2, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், தனியாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, துவரம்பருப்பு - ஒரு கைப்பிடி, புளி - நெல்லிக்காய் அளவு, மிளகாய்த்தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு,



செய்முறை: காய்களை நறுக்கிக் கொள்ளவும். வெறும் கடாயில் மொச்சையை வறுத்து, குக்கரில் போட்டு தண்ணீர் விட்டு, 5 நிமிடம் வேக வைக்கவும் (ஊற வைத்து, வேக வைப்பதனால் 3 விசில் வந்தால் போதும்). துவரம்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, தனியே எடுத்து வைக்கவும். தேங்காய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி, கத்தரிக்காய், முருங்கைக்காய், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கி... மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு, கறிவேப்பிலையை போட்டு சிறிது நேரம் வதக்கவும். இதனுடன் தேங்காய் - சீரக விழுதை சேர்த்து ஒரு முறை கிளறவும். இவற்றை குக்கரில் போட்டு, புளியைக் கரைத்துவிட்டு, வேக வைத்து... பருப்பு, மொச்சை, தாளித்தது ஆகியவற்றை சேர்த்து, குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

காராமணி குழம்பு

தேவையானவை: காராமணி - முக்கால் கப், கத்திரிக்காய் - 2, வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், தக்காளி - தலா 1, பூண்டு - 2 பல், புளி - நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன், தேங்காய் துண்டுகள் - 2, சீரகம் - ஒன்றரை டீஸ்பூன், தனியாத்தூள் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: தேங்காய், சீரகத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். காராமணியை வறுத்து குக்கரில் போட்டு, தண்ணீர் விட்டு 5 விசில் வரும்வரை வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி, கத்திரிக்காய், கீறிய பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து வதக்கி, அரைத்த தேங்காய் - சீரக விழுதைப் போட்டு, புளியைக் கரைத்து ஊற்றவும். ஒரு கொதி வந்ததும், வேக வைத்த காராமணியை சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்துக் குழம்பில் கொட்டி, கத்திரிக்காய் வெந்ததும் இறக்கவும்.

கோவக்காய்|பனீர் குழம்பு

தேவையானவை: நறுக்கிய கோவக்காய் - முக்கால் கப், பனீர் துண்டுகள் - ஒரு கப், பெரிய வெங்காயம் - 2 (தோல் உரித்து அரைத்துக் கொள்ளவும்), மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன், சீரகம், சோம்பு - தலா ஒரு டீஸ்பூன், புளிக் கரைசல் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



பொடிக்க: தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் (தனித்தனியே வறுத்து அரைக்கவும்).

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய பனீரை போட்டு வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, சூடானதும் சோம்பு, சீரகம் போட்டு தாளித்து, வெங்காய விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். இதனுடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நறுக்கிய கோவக்காயைப் போட்டு நன்றாக வதக்கி... உப்பு, மஞ்சள்தூள், வறுத்து பொடித்த மசாலாவை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். இதில் புளிக் கரைசலை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, வறுத்த பனீரை போட்டு, நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.

Saturday, June 12, 2010

Swimming and its related stories

I started swimming this summer and its always fun. There are so many memories of swimming and would like to document some of my observations

1 ) People don't care about whether you are fat or thin (Thank you America , I am not the big guy in the pool)
2 ) When I went to the Pool opening party , i was glad that I knew a bunch of people , one person is the one who organizes my place and there is another girl who helped me in finding my phone , I kept in my car and I tried to call it using the "whereismyphone.com" website , but I know it was there somewhere , but I was not able to find it.
I knocked this girls door , that too her Patio door , and asked her to help me locate my phone , to call my phone , she was kind enough to do that and also located my phone(I have fat fingers !! ). Thanks to her.
3 ) The amount of confidence you get when you know the depth of the pool is only 4 feet is a lot. Once you know that you are not going to drown and die , that takes a big zinger out of the fear of swimming, last time i heard , dieing not very cool :).
4 ) Never challenge a 10 year old girl that you can have a race with her in spite of the fact that she asks you 10 or 15 times, she can kick your butt very efficiently and dance around the pool with that creed.
5 ) Its always fun to see kids and their single moms (nice place to get to know single moms is the apartment pool ).
6 ) May be its me (or all men ), I find it sexy not when the women are in two-piece swim-wear , but wearing a simple shirt over it.
7 ) I have been going to the gym and was always thinking that the depth was 6 feet and never even ventured into the pool , I went for it and saw it was only 4 feet and its temperature controlled and next to it we have a whirlpool also. I have been paying for this for the past 3 years and never used it (Knowledge is power !! )
8 ) In the Gym , its a long stretch (may be over 25 feet), I struggle to finish one round even with 3 breaks, there was one person(may be in his early 50s) who was swimming so quick from one end to another , that before I finish one stretch , he will do 3 rounds, usually I will take it in my stride , because I will be under the impression , guys here are taught swimming from their kinder garden and I learned recently (by myself).
But after around 45 minutes when he left , I was speechless, he had only one LEG and he was not able to walk with support , but he swims like a fish. This was my source of inspiration now.
9 ) The first time when I tried to learn swimming , I had scheduled classes with the YMCA near my old place , I was working in New York and would come early for swimming. The last day of my class , they ask you to do a Dive (water depth 8 feet), I dived and sunk like a stone and I was sure that I am going to die, all good thoughts came to me and I was relieved , finally one of my swimming instructor pulled me out, it was such a nice feeling , just to come out of water and breathing. So the best thing ever said to me was "Breathe ! Breathe" , thats the best thing.
10 ) Young girls get offended when you say that they are younger than their look they do get offended, but if I said that a older woman , they would take it as a compliment.
In my Pool ,there comes a girl who says she is 14 , I tease her that she looks like 8 or 9 , she gets so mad and its fun to watch that expression. She will bring all her friends to the rescue, i am 14 and then she will kick my butt in Swimming.

Monday, May 3, 2010

My Garden


The following are the pictures of my garden , and I want to monitor this as it grows !!

Two years back I went to Home Depot in the middle of July to get a Herb Garden along with Tomatoes , we used to monitor that everyday and it didn't even do anything and the colder season started and there it went.


This year is a new year and new ray of sunshine is there , I have mentioned in my TO-Do list in my board to water the plants , so I have the following
1 ) Rose (I always liked Roses , no smell but they are good).
2 ) Lemon Grass ( loved the smell , just holded the leaf and smelled , it was a sweet aroma !! )
3 ) assorted vegetable garden , this has tomatoes and a whole bunch of herbs.4 ) Got seeds for Habenaros and planted them inside for now , thats what was written , so once it grows will keep it outside.


The following are some of the pics from my "GARDEN "
















Sunday, March 7, 2010

Vinnai Thandi Varuvaya Review

After a very long time , I went to a theater to watch a Tamil Movie , (the last movie I saw was BABA and I had taken a resolution of NOT watching a movie in theater !! ). This Theater is in Edison and its a completely Desi Theater, only Indian movies , Hindi , Telugu and Tamil.
Theater has Samosas , Masala Vada , Cardamom and Masala chai to name a few in the concession stand.
The actual screen was so small , it felt like watching a movie in a KPN travels bus from chennai to Bangalore !
After all the build up , the following are my views on the Movie

Story :
Boy meets a girl falls head over heels , girls father doesn't approve , what happens next ? The story can be written in one line , but the screenplay is the one which makes all the difference. The dialogues makes you chuckle ( when simbu asks Trisha "you could have gone to church in madras " !you have to see the movie to understand the context ).

Trisha looks good in certain angles ( but I was not able to see her Tattoo ! ) , she dresses up in saree most of the time and it really compliments her , also when she walks she has a duck feet and it sure looks funny when you look from behind. If we have to rub her makeup , it would take a day to look at her actual face. Certain scenes , particularly the ones in NYC , her makeup looks too clumsy. In some scenes , the dance between Trisha and simbu looks like a elder sister and a younger brother (remember the movie with Tabu and Abbas !! ) .


What I liked in the movie

1 ) Simbu has done a commendable job ( this was the first Simbu movie which I was watching on Theater! ) , none of his old mannerisms(his fingers were with him itself !! no more cracking etc and no punch dialogues).
2 ) ARR , I could not say anything bad , not only the music of the movie , the background score was also awesome (either the Mustafa Mustafa song in the middle , or the complete lengthy stretch during Simbu's search for Trisha in Kerala).
3 ) Camera, the camera has really played a vital role in the movie ,every song is a poem , particularly the song that was filmed in Italy and NYC. The boat which Simbu goes to meet Trisha's family , it has all the luxuries ( In all movies I only see a Apple Mac only !! ).

Things which I didn't like about the story

1 ) Trisha's character , very confused and in a complete disarray , she is not able to make a decision !! , she refuses marriage at the wee-end , and she dumps the guy , eventhough the guy comes back and says she will wait for her, once again she dumps him for someone else. Was she an opportunistic person just waiting for a better catch ?
2 ) The story goes in circles and it seemed like the director was confused on what to do with the characters after a while.
3 ) Trisha's voice(Chinmayi ! ) sounds too matured for her character, doesn't sync well with her.
4 ) The character of Ganesh , his voice is also very rough and it would have better if his voice was dubbed !!
5 ) I don't agree with the context , where a guy and girl have to be in the same field to have a successful life.


Overall its a perfect entertainer, don't expect much , but its a slow movie and may be a date movie.

Tuesday, March 2, 2010

Eating , Diet and Obesity ! are these true !

I am a big fan of Freakanomics , I believe its one of the better books written on economics , which was written for a normal human being.
There is a new podcast from their Team and it talks about the Obesity and over-eating , the following were the quick pointers.
1 ) If we see any 16th or 17th century paintings, Fat was beauty , you can hardly find anyone thin.
2 ) Till 20th century in most countries (even now ) , people are not well fed
3 ) The obesity industry is one of the biggest fads of this century.
4 ) The amount of money in Diet companies, Diet Doctors is worth billions of $$.
5 ) This one was interesting , till now all the research have never proved that overweight causes Diabetes , Heart Disease.
6 ) In 2004 CDC (Center for disease control ) release a study which said around 400 thousand people are dying every year because of overweight.
7 ) After analyzing the results , and checked by experts it was finalized that it was around 20 K people (same number of people who die because of underweight ! )
8 ) Till now the amount of money that is spent on educating people has just been water on the drain !!
9 ) is it true that lean people get more , and a little chubby people get it raw ?
So to lose weight or not , is the question !!

For more information , try reading this book , Fat Politics: The Real Story Behind America’s Obesity Epidemic,