Friday, June 17, 2011

Fun QA

சட்டசபையில் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று தி.மு.க. சொல்கிறதே?

பழைய முழக்கங்கள் ஞாபகத்துக்கு வருகின்றன!

அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு.

ஜனநாயகம் காக்கும் போரில் மிசா கால் தூசுக்கு சமம்.

மிசாவைக் காட்டி மிரட்டி னால், தமிழ்நாட்டுக்குள் நுழைய விசா வாங்க வேண்டி வரும்.

வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்.

துணிந்தவனுக்குத் தூக்கு மேடை பஞ்சு மெத்தை.

மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை... என்றெல்லாம் வளர்ந்த கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், 'தி.மு.க. உறுப்பினர்களுக்கு சபையில் பாதுகாப்பு இல்லை. ஒரே பகுதியில் இடம் ஒதுக்கினால்தான், சபைக்கு வருவோம்’ என்கிறார்.

ஸாரி, 'தளபதி’ என்ற அடை மொழி மிஸ் ஆகிவிட்டது!

கோட்சே இன்று இருந்திருந்தால், யாரைச் சுட்டிருப்பார்?

கோட்சேவை ஏதோ கூலிப் படைத் தலைவனைப்போலச் சொல்கிறீர்களே!

கொலை செய்வது கோட்சேவின் தொழில் அல்ல. தன்னுடைய நோக்கங்களுக்கு விரோத மாகக் காந்தி செயல்படுவதாக நினைத்தார் கோட்சே. நீதிமன்றத்தில் தன்னுடைய செய்கையை நியாயப்படுத்தியே பேசினார். இந்து தர்மத்தைக் காப்பாற்றுவதற்காகவே, இந்தக் காரியத்தைச் செய்ததாகச் சொன் னார்.

அதைவிட முக்கியமானது, தனக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து அவர் அப்பீல் செய்யவில்லை. நாம் அவரது சித்தாந்தத்தை ஏற்காவிட்டாலும், மகாத்மாவைச் சுட்டவர்கூட அழுத்தமான வரே!

No comments:

Post a Comment